Published : 24 Jun 2021 05:53 AM
Last Updated : 24 Jun 2021 05:53 AM

அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் : திறந்த நிலை படிப்புக்கு அங்கீகாரம் :

திருவண்ணாமலை: டெல்லி இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக் கழகம் சார்பில் 6 சான்றிதழ் படிப்புகளுக்கும், 2 பட்டப் படிப்புகளுக்கான வகுப்புகளை தி.மலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள  அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “18 வயது முதல் அனைத்து வயதினரும் கல்வி பயிலும் வகையில் இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் அனுமதித்துள்ளது. 6 சான்றிதழ் படிப்புகள் மற்றும் 2 பட்டப்படிப்புகள் தொடங்கப்படவுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன் முறையாக கற்போர் உதவி மையமாக தேர்ந்தெடுத்து அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த படிப்புகளுக்கான சேர்க்கை ஜுலை 15-ம் தேதி வரை இணையதளம் வழியாக நடைபெறுகிறது. படிப்பை இடையில் நிறுத்தியவர்களும், முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களும் ஏதேனும் ஒரு தொழில் செய்து வருபவராக இருந்தாலும், இந்த மையத்தின் மூலம் கல்வி கற்று பயனடையலாம். https://ignouadimission.samarth.edu.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு 88254-67239, 70994-97164 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x