Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM

சென்னை ‘சிப்பெட்’டில் வேலைவாய்ப்பு வழிகாட்டு ஆலோசனை :

சென்னை கிண்டியில் உள்ளமத்திய பிளாஸ்டிக் பொறியியல்,தொழில்நுட்ப நிறுவனத்தில் (சிப்பெட்) வேலைவாய்ப்பு வழிகாட்டு ஆலோசனை நடைபெற உள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மத்திய அரசின் ‘சிப்பெட்’ நிறுவனம், சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்கு,10-ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐபடித்தவர்கள், பிஎஸ்சி பட்டதாரிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வேலைவாய்ப்பு வழிகாட்டு ஆலோசனை வழங்கப்படுகிறது.

இதுதொடர்பான விவரங்களை ‘சிப்பெட்’ இணையதளத்தில் (www.cipet.gov.in) அறிந்துகொள்ளலாம். 9952046851,99418 44937 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறுஅறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x