Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM

பிரதமர் மோடியின் கண்ணீரால் மனித உயிரை காப்பாற்ற முடியாது : ராகுல் காந்தி விமர்சனம்

‘‘கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களை ஆக்சிஜன் தான் காப்பாற்றும்; பிரதமரின் கண்ணீர் அதனை செய்யாது" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

கரோனா பெருந்தொற்றின் 2-வது அலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களில் 90 சதவீதம் பேரைநம்மால் காப்பாற்றி இருக்க முடியும். போதுமான ஆக்சிஜன் வழங்கப்பட்டிருந் தால் அவர்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடிஇந்த விஷயத்தில் கவனம் செலுத்தாமல், மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் மூழ்கியிருந்தார்.

இந்நிலையில் கரோனா மூன்றாம் அலையை தவிர்க்க முடியாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதை சமாளிப்பதில் இரண்டு முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றில் முதலாவது தடுப்பூசி. கரோனா தடுப்பூசியே பேரிடரை தடுப்பதற்கான முக்கியதூணாக விளங்குகிறது. எனவே,அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம். இரண்டாவது, மருத்துவமனைகளில் போதுமான அளவு படுக்கைகளும், ஆக்சிஜன், மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங் கள் இருப்பதையும் உறுதி செய்து கொள்வதாகும். இவற்றில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களை ஆக்சிஜன்தான் காப்பாற்றும். பிரதமரின் கண்ணீர் அதனை செய்யாது என்பதை உணர வேண்டும்.

இந்தியாவில் ஒரே நாளில்86 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. தினமும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x