Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM

மதுரை  மதுரை பெருநகர் வடக்கு மின் பகிர்மான செயற்பொறி யாளர் ஜீ

மதுரை

 மதுரை பெருநகர் வடக்கு மின் பகிர்மான செயற்பொறி யாளர் ஜீ.மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூன் 23) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கேகே நகர் மின் பிரிவுக்குட்பட்ட இன்டஸ்ட்ரியல் காலனி, சிட்கோ கேட் 1 முதல் 5 வரை, அரசு பெண்கள் ஐடிஐ, உயர் நீதிமன்ற அலுவலர் குடியிருப்பு, சங்கர் நகர், ஆர்.டி.ஓ. அலுவலகப் பகுதிகள், கற்பக நகர் 1 முதல் 16 தெருக்கள், முத்துராமலிங்கபுரம், மூன்றுமாவடி கிழக்கு, சம்பக்குளம், எஸ்.பி. அலுவலகம், இ.பி. காலனி, விவேகானந்தர் நகர் தெற்கு. மற்றும் சொக்கிகுளம் மின் பிரிவுக்குட்பட்ட நேதாஜி மெயின் ரோடு, மருதுபாண்டியன் நகர், பீ.பீ.குளம், சிங்கராயர் காலனி, சத்தியமூர்த்தி நகர், பி.டி.ஆர். மெயின் ரோடு, கட்டபொம்மன் தெரு, நரிமேடு மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பெரியகுளம்

 பெரியகுளம் மின் பகிர்மான செயற்பொறியாளர் ப.பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூன் 23) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பெரியகுளம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட வைகை புதூர், ஓடைவயல், சுக்காம்பாறை, சத்யா நகர், கோவில்காடு, அகமலை, ஊரடி, ஊத்துக்காடு, சின்னூர், பெரியூர். வைகை அணைதுணை மின் நிலையத்துக்குட்பட்ட ரெங்காபுரம், லட்சுமிபுரம்,அணைக்கரைபட்டி, எ.வாடிப்பட்டி, சேடபட்டி, அய்யனத்தேவன்பட்டி, வெள்ளையத்தேவன்பட்டி, பெருமாள்பட்டி, மூணான்டிபட்டி, தருமத்துப்பட்டி, நடுப்பட்டி, புள்ளிமான்கோம்பை, ராசப்பன்கோட்டை, தானூர், கொட்டேபட்டி, மல்லையக்கவுண்டன்பட்டி, குன்னத்துப்பட்டி. கடமலைகுண்டு துணை மின் நிலையத்துக்குட்பட்டதேவராஜ் நகர், கே.கே.புலியூர், அய்யனார்புரம், டாணா தோட்டம், அண்ணா நகர், துரைசாமிபுரம், ராஜேந்திரா நகர், ஆத்தாங் கரைபட்டி ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

சின்னமனூர்

 சின்னமனூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் பெ.ரமேசு குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பராமரிப்புபணி கள் காரணமாக இன்று (ஜூன் 23) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை உத்தமபாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட ராயப்பன்பட்டி, அணைப்பட்டி. கம்பம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட மஞ்சக்குளம், சாமாண்டிபுரம், ஆங்கூர்பாளையம் மற்றும் சின்ன ஓவுலாபுரம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட சின்ன ஓவுலாபுரம், முத்துலாபுரம், ஊத்துப்பட்டி, ஆர்.என்.பட்டி ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x