Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

கரோனாவுக்கு எதிரான போரில் - நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா : பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

கரோனாவுக்கு எதிரான போரில் நம்பிக்கை ஒளியாக யோகா திகழ்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. இதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு முதல் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 7-வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் நேற்று கொண் டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

‘ஆரோக்கியத்துக்கு யோகா' என்பதே 2021-ம் ஆண்டு யோகா தினத்தின் கருத்துரு ஆகும். கரோனா காலத்தில் இந்த கருத் துரு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உலக நாடுகளில் கரோனா பரவியபோது, அதை எதிர்கொள்ள முடியாமல் மனதளவில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அந்த நேரத்தில் யோகா கைகொடுத்தது. மக்களிடையே தன்னம்பிக்கையை விதைத்தது. அவர்களின் மன உறுதியை வலுப்படுத்தியது. யோகாசனங்கள் மூலம் கரோனா வுக்கு எதிராக போராட முடியும் என்ற நம்பிக்கையை ஏற் படுத்தியது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது சுகா தார ஊழியர்கள், முன்களப் பணி யாளர்கள் யோகாவை தங்களது கேடயமாகப் பயன் படுத்தினர். வைரஸ் பாதிப்புகளை குறைக்க மருத்துவர்களும், செவிலியர்களும் யோகாவின் உதவியை நாடினர். பிராணாயாமம், அனுலோம் விலோம் உள்ளிட்ட பயிற்சிகள் நோயாளிகளின் சுவாசப் பிரச் சினைக்கு தீர்வாக அமைந்தன.

பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் யோகாசனங்கள் செய்யும் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக மாகப் பகிரப்பட்டன. எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மக்களின் உடல் நலன், மன நலன் மேம்பட யோகா உதவுகிறது. நம்முடைய ஆத்ம சக்தியை அதி கரிக்கச் செய்கிறது. எதிர்மறைச் சிந்தனைகளை விரட்டி யடிக்கிறது.

உலகம் ஒரு குடும்பம் என்ற தத்துவத்தை இந்தியா வலியுறுத்து கிறது. யோகா மூலம் உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என விரும்புகிறேன். மனித குலத்துக்கு அச்சுறுத்தல் எழும்போது, மக்களின் உடல் நலனை பாதுகாக்க யோகா உதவுகிறது. மகிழ்ச்சியான வாழ்க் கைக்கு வழிகாட்டுகிறது. இதன் காரணமாக உலகளாவிய அளவில் யோகா மீதான மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

சர்வதேச யோகா தினத்தில் இந்தியாவும் உலக சுகாதார அமைப்பும் ஒன்றிணைந்து ‘எம்-யோகா' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளோம். இந்த செயலி உலகின் பல்வேறு மொழிகளில் செயல்படும். அனைத்துவிதமான யோகாசனங்களும் இந்த செயலி யில் இடம்பெற்றிருக்கும். பண் டைய கால அறிவியலையும் இன்றைய தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைத்து ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். இதற்கு எம்-யோகா செயலி சிறந்த உதாரணம். இதன்மூலம் ‘ஒரே உலகம், ஒரே சுகாதாரம்' என்ற கனவு நனவாகும்.

சிறாருக்கு யோகா பயிற்சி

கரோனாவில் இருந்து சிறாரை பாதுகாக்க அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க பல்வேறு வகைகளில் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. குறிப்பாக ஆன் லைனில் சிறாருக்கு யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. சிறார் மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களும் யோகாசனம் செய்ய வேண்டுகிறேன். நாள்தோறும் யோகாசானம் செய்து ஒவ்வொரு இந்தியரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இதுவே எனது விரும்பம். நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம். கரோனாவுக்கு எதிராக தீவிரமாக போரிட்டு வருகிறோம். இந்த போரில் நம்பிக்கை ஒளியாக யோகா திகழ்கிறது. இந்தியர்கள் அனைவரையும் யோகா சென்றடைய வேண்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

திருக்குறளை மேற்கோள் காட்டிய மோடி

உள்நாடு, வெளிநாடுகளில் பல நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது பலமுறை திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். சர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றியபோதும் திருக்குறள் ஒன்றை பிரதமர் மோடி மேற்கோள் காட்டினார்.

‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்ற திருக்குறளை அவர் சுட்டிக் காட்டினார். நோய் என்ன, நோய்க்கான காரணம் என்ன, நோயை தீர்க்கும் வழி என்ன ஆகியவற்றை ஆராய்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது இந்தக் குறளின் அர்த்தம்.

இதன்படி கரோனா வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அருமருந்தாக யோகா திகழ்கிறது. அனைவரும் யோகாசனம் செய்ய வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

பகவத் கீதையை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி, ‘‘எல்லாவற்றுக்கும் யோகாவில் தீர்வு உள்ளது. யோகா பயணத்தில் நாம் ஒன்றாக முன்னேறிச் செல்ல வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார்.

மேலும், ரவீந்திரநாத் தாகூரின் கருத்துகளை குறிப்பிட்டு பேசிய பிரதமர், ‘‘நமது தனிமை என்பது கடவுளிடம் இருந்தும், மற்றவர்களிடம் இருந்தும் நாம் விலகியிருப்பதை குறிக்கவில்லை. யோகா மூலமான ஒற்றுமையைக் குறிக்கிறது’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x