Published : 22 Jun 2021 03:12 am

Updated : 22 Jun 2021 03:12 am

 

Published : 22 Jun 2021 03:12 AM
Last Updated : 22 Jun 2021 03:12 AM

திருமணம், சுப நிகழ்ச்சிகள் குறித்து வட்டாட்சியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை

திருமணம், சுப நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து, வட்டாட்சி யர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது:


மாவட்டத்தில் உள்ள கோயில்கள், திருமண மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்கள், ஓட்டல்கள், விருந்தினர் அரங்கங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அனைவரும் கைகளை சுத்தம் செய்ய ஏதுவாக, நுழைவு வாயிலில் கிருமிநாசினி திரவம் வைக்க வேண்டும். உடல் வெப்ப அளவு பரிசோதித்து, பதிவு செய்ய வேண்டும்.

வட்டாட்சியரிடம் பதிவு செய்யப்படும் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, வருவாய்த்துறை, மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சியைச் சார்ந்த அலுவலர்கள் திடீர் தணிக்கை மேற்கொள்வர்.

அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிந்து, தனி நபர் இடைவெளியை பின்பற்றி,50 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள வேண்டும்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கள ஆய்வு நடத்தி, விதியை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 பிரிவு 51-ன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x