Published : 22 Jun 2021 03:12 AM
Last Updated : 22 Jun 2021 03:12 AM

கோவை கோவையில் இன்று (ஜூன் 22) மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:அவசர கால பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் தாமஸ்பார்க் மின்பாதையில் சக்தி சுகர்ஸ், பிஎஸ்என்எல் குடியிருப்பு, நீல்கிரீஸ், அவிநாசி சாலையில் அண்ணா சாலை சந்திப்பு முதல் அவிநாசி சாலை மேம்பாலம் வரை, ரேஸ்கோர்ஸ் ஒருபகுதி, தண்டுமாரியம்மன் கோயில் பகுதிகளில் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்திவைக்கப்படும்

கோவை

கோவையில் இன்று (ஜூன் 22) மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:அவசர கால பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் தாமஸ்பார்க் மின்பாதையில் சக்தி சுகர்ஸ், பிஎஸ்என்எல் குடியிருப்பு, நீல்கிரீஸ், அவிநாசி சாலையில் அண்ணா சாலை சந்திப்பு முதல் அவிநாசி சாலை மேம்பாலம் வரை, ரேஸ்கோர்ஸ் ஒருபகுதி, தண்டுமாரியம்மன் கோயில் பகுதிகளில் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்திவைக்கப்படும்.

பெரியகடைவீதி மின்பாதையில் ரேஸ்கோர்ஸ் ஒருபகுதி, பெரியகடை வீதி, திருச்சி சாலையில் சுங்கம் முதல் கண்ணன் பல்பொருள் அங்காடி வரை, மேற்கு கிளப் சாலை ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், டாடாபாத் மின்பாதையில் 100 அடி சாலையின் இடபுறம் ஒருபகுதி, காந்திபுரத்தில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும், காந்திபுரம் மின்பாதையில் விவேகானந்தா சாலை முழுவதும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்திவைக்கப்படும்.

ராஜவீதி மின் பாதையில் வைசியாள் வீதி, பெரியகடைவீதி, கருப்பையா கவுண்டர் வீதி, தாமஸ் வீதி, இடையர் வீதி, ரங்கே கவுடர் வீதி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், டவுன்ஹால் மின்பாதையில் எச்எம்டிஆர் வீதி, எல்என் வீதி, பெருமாள் கோயில் வீதி, டவுன்ஹால் ஐந்து முக்கு வீதி, பெரிய கடைவீதி ஆகிய பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.

கவுண்டம்பாளையம் துணை மின்நிலையத்துக்குப்பட்ட சேரன்நகர், ஐடிஐ காலனி, அஷ்டலட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, பியூன்ஸ் காலனி ஆகிய இடங்களில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவிநாசி

அவிநாசி கோட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு துணை மின் நிலையங்களில் உயர் அழுத்த மின் பாதைகளில், பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்காணும் பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம்1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரிய செற்பொறியாளர் தீ.விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுண்டக்காம்பாளையம், வேட்டுவபாளையம், ஆலாங்காட்டுப்பாளையம், அசநல்லிபாளையம், வெள்ளியம்பாளையம், அழகாபுரி, செல்வபுரம், மகாலட்சுமி நகர், நாதம்பாளையம், குள்ளேகவுண்டன்பாளையம், சுதந்திரநல்லூர், கந்தம்பாளையம், சீனிவாசபுரம், மங்கலம் சாலை ஒரு பகுதி, புதிய பேருந்து நிலையம், பி.எஸ்.சுந்தரம் வீதி, முனியப்பன் கோயில் வீதி,அவிநாசி பிரதான சாலை, பெரியார் நகர், சஞ்சீவ் நகர், ஆனந்த் அப்பார்ட்மென்ட், வெங்கமேடு ஒரு பகுதி, உண்ணாமலை நகர், கங்கா நகர், திருமுருகன் பூண்டி, துரைசாமி நகர், சூர்யா நகர், நெசவாளர் காலனி, அகில் நகர், வி.ஜி.வி. கார்டன், எம்.ஜி.ஆர் நகர், ஆத்துப்பாளையம் சாலை, அம்பேத்கார் நகர், திருவள்ளுவர் நகர், பூலுவபட்டி நால் ரோடு, பூலுவபட்டி, விக்னேஸ்வரா நகர், பழனிசாமி நகர், அம்மன் நகர், சின்னப்புதூர், பெருமாநல்லூர் கிழக்குப் பகுதி, சந்தைக்கடை, லண்டன் நகர், மாந்தோட்டம், பிள்ளையார் கோயில் தெரு, ராபா கார்டன், ஆண்டிபாளையம், கணக்கம் பாளையம் ஒரு பகுதி, மீனாட்சி நகர், பொன்விழா நகர், நாதம்பாளையம் மற்றும் விக்னேஸ்வரா காலனி.

செங்கப்பள்ளி

செங்கப்பள்ளி துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வரை செங்கப்பள்ளி, நல்லாக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், தனலட்சுமி மில், சென்னிமலைபாளையம், பூசாரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x