Published : 21 Jun 2021 03:13 AM
Last Updated : 21 Jun 2021 03:13 AM

மின் நுகர்வோருக்கான : புதிய சேவை மையம் ‘மின்னகம்' தொடக்கம் :

சென்னை

பொதுமக்கள் மின் துறை சார்ந்தகுறைகளைத் தெரிவிக்க ‘மின்னகம்’ என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த மின் நுகர்வோர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை நேற்று திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின், பிரத்யேக9498794987 என்ற செல்போன் எண்ணையும் அறிமுகப்படுத்தினார்.

இந்த மையத்தில் 3 ஷிப்ட்களில் 195 பேர் பணியில் ஈடுபடஉள்ளனர். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை கணினிமூலம் பதிவு செய்து, தொடர்புடைய அலுவலகங்களுக்கு அனுப்பிவைத்து, துரித நடவடிக்கை மேற்கொள்வர். மேலும்,புகார்தாரரின் செல்போனுக்குபுகார் எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு, அவை சரி செய்யப்பட்டவுடன், அதுகுறித்த தகவலும் அனுப்பப்படும்.

முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் பதிவேற்றப்படும் புகார்களும் கண்காணிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கசமூக ஊடகப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மின் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தயாநிதி மாறன் எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தி துறை முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x