Published : 21 Jun 2021 03:15 AM
Last Updated : 21 Jun 2021 03:15 AM

புதுச்சேரி தடுப்பூசி திருவிழாவில் - கடந்த 5 நாட்களில் 77,353 பேருக்கு கரோனா தடுப்பூசி : சுகாதாரத்துறை செயலர் அருண் தகவல்

புதுச்சேரி தடுப்பூசி திருவிழாவில் 5 நாட்களில் 77,353 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் கூறியதாவது:

100 சதவீத கரோனா தடுப்பூசி செலுத்தி கரோனா இல்லாத மாநிலமாக மாற்ற புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மற்ற துறைகளுடன் இணைந்து ஜூன் 16 முதல் 19-ம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டது. இத்திருவிழா 21-ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தேர்ந்தெடுத்த மையங்கள் மட்டுமின்றி, நடமாடும் தடுப்பூசி குழுக்கள் மூலமாகவும் அனை வருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசிக்கு தயக்கம் காட் டும் மக்களின் வீடுகளுக்கே செல்லும் மருத்துவக் குழுவினர், ஆங்காங்கே தனிமனித இடைவெளியுடன் கூடிய சிறு கூட்டங் களில் மக்களின் ஐயங்களையும், தேவையற்ற பயத்தையும் போக்கி மருத்துவ ஆலோசனைகளை வழங்கி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவித்து வருகின்றனர். இதன்மூலம் பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு ஆர்வமுடன் வந்துதடுப்பூசி செலுத்திக் கொள்கின் றனர். இதன் பலனாக சென்ற 5 நாட்களில் 77,353 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். நடமாடும் தடுப்பூசி செலுத்தும் குழுவினர் செய்யும் சேவை, தடுப்பூசி மையத்துக்கு வர இயலாத மக்களுக்கு மிகுந்த உதவியாக அமைந்துள்ளது.

புதுச்சேரியில் ஒவ்வொரு கிரா மமாக 100 சதவீதம் தடுப்பூசி போட்ட கிராமம் என்ற இலக்கை அடைய பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அரசு அறிவித்திருக்கும் பரிசுதிட்டங்களும் தனியார் நிறுவ னங்கள் சில அறிவித்திருக்கும் சலுகைகளும் மக்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடமாடும் தடுப்பூசி செலுத்தும் குழுவினர் செய்யும் சேவை, தடுப்பூசி மையத்துக்கு வர இயலாத மக்களுக்கு மிகுந்த உதவியாக அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x