Published : 20 Jun 2021 03:12 am

Updated : 20 Jun 2021 03:12 am

 

Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்: : அர்ஜென்டினா வெற்றி :

பிரேசிலியா

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் நேற்று பிரேசிலியா நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா - உருகுவே அணிகள் மோதின.

இதில் 7-வது நிமிடத்தில் லயோனல் மெஸ்ஸி வலது பக்கத்தில் இருந்து இலக்கை நோக்கி துல்லியமாக உதைத்த பந்து கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது. எனினும் திரும்பி வந்த பந்தை கோன்சலஸ் கோலாக மாற்றத் தவறினார். 13-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து மெஸ்ஸி பந்தை கடத்திச் சென்று கோல்கம்பத்துக்கு நெருக்கமாக நின்ற கைடோ ரோட்ரிக்ஸுக்கு உதைக்க, அவர் தலையால் முட்டி கோலாக மாற்றினார்.


இதனால் அர்ஜென்டினா 1-0என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதற்கு பதில் கோல் அடிக்க உருகுவே அணியின் வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக் காமல் போனது. முடிவில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x