Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

இந்தியாவில் கரோனா தொற்று 60,753 ஆக குறைந்தது :

இந்தியாவில் கடந்த 74 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா வைரஸ் தொற்று, 60,752 ஆக குறைந்துள்ளது. உயிரிழப்பும் கடந்த 2 நாட்களாக 2 ஆயிரத்துக்கு குறைவாகவே உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் 2-வது அலை கணிசமாக குறைந்துவிட்டது. தினசரி கரோனா தொற்று கடந்த 74 நாட்களுக்குப் பிறகு 60,753 ஆக கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகி உள்ளது.

இதன்மூலம் நாட்டில் மொத்தம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 23,546 ஆனது.

97 ஆயிரம் பேர்

அதேபோல் 24 மணி நேரத்தில் உயிரிழப்பும் 1,647 ஆக குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களாகவே உயிரிழப்பு 2 ஆயிரத்துக்குக் கீழ் பதிவாகி உள்ளது. அதே போல் ஒரே நாளில் 97,743 பேர் குணமடைந் துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 86 லட்சத்து 78,390 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தற்போது நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 60,019 ஆக குறைந்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x