Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM

காணொலியில் மக்கள் குறைதீர் கூட்டம்: கரூர் ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

கரூர்: கரோனா பரவல் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங் களில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்றுவந்த மக்கள் குறைதீர் கூட்டம், மாதந்தோறும் நடைபெற்றுவந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருதி திங்கள்கிழமைதோறும் காணொலி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களும் காணொலி வாயிலாக பங்கேற்பார்கள். இந்த காணொலி குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது செல்போனில் bharatVC என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

https://bharatvc.nic.in/viewer/75349 56730 என்ற லிங்க்கில், 123456 என்று பாஸ்வேர்ட் கொடுத்து காணொலி குறைதீர் கூட்டத்தில் பங்கேற்கலாம். மேலும், விவரங்களை https://karur.nic.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். திங்கள்கிழமைகளில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்தக்கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x