Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

விலையைக் கட்டுக்குள் வைக்க பரிந்துரை - ரூ. 14,775 கோடி உர மானியம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உரத்துக்கு ரூ. 14,775 கோடி மானியத் தொகை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டை-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) மற்றும் யூரியா கலப்பு இல்லாத உரங்களுக்கு இந்த மானிய உதவி அளிக்கப்படும்.

மண்ணின் வளத்தை பாதிக்காத வகையில் மண்ணுக்கு ஊட்டச் சத்து அளிக்கும் வகையிலான உரங்களுக்கு இந்த மானியம் அளிக்கப்படும்.

கடந்த மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் டை அம்மோனியம் பாஸ்பேட் உரத்துக்கான மானிய உதவியை 140 சதவீதம் அதிகரித்து பரிந்துரைத்தது. இந்த மானிய உதவியால் விவசாயிகள் பயனடைவர் என்று மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை இணை அமைச்சர் மான்சுக் மண்டேவியா தெரிவித்தார். இதன்படி 50 கிலோ அடங்கிய டிஏபி உர மூட்டைக்கு ரூ. 1,200 மானியம் வழங்கப்படும். முன்னர் ரூ. 500 வழங்கப்பட்டது.

யூரியா உரத்தைப் பொறுத்தமட்டில் அதன் அதிகபட்ச விற்பனை விலையை கட்டாயம் மூட்டையில் அச்சிட வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

யூரியா உர மூட்டை ஒன்றுக்கு மத்திய அரசு ரூ. 900 மானியம் அளிப்பதாக அவர் தெரிவித்தார் அதேபோல யூரியா கலப்பு அல்லாத உரங்களுக்கான மானியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x