Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

கரோனா நோயாளிகளுக்கு உதவ ரூ.7 லட்சம் நிதி திரட்டிய சிறுவன் :

கரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக சண்டிகரைச் சேர்ந்த சிறுவன் 10 நாளில் ரூ.7 லட்சம் நிதி திரட்டியுள்ளார்.

சண்டிகரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கர்வ் சிங் குரானா. இவரது உறவினர் ஒருவர் டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், அவருக்கு தட்டுப்பாடு காரணமாக ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இதைப் பார்த்து கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கி அவர்களுக்கு உதவ கர்வ் சிங் குரானா முடிவு செய்தார். இதற்காக சமூக வலைத்தளத்தில் நன்கொடை பெறுவதற்காக ஒரு பக்கத்தை உருவாக்கினார். 10 நாட்களுக்கு முன்புதான் அந்தப் பக்கத்தை உருவாக்கினார். அதன் மூலம் 10 நாட்களில் நன்கொடையாளர்கள மூலம் ரூ.7 லட்சம் நிதி திரட்டியுள்ளார்.

கரோனா நோயாளிகளுக்கு உதவ திரட்டப்பட்ட நிதியில் இருந்து இதுவரை 16 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்வ் சிங் குரானா வழங்கியுள்ளார். கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வர முடியாதவர்களின் வீடுகளுக்கு சென்று ஆக்சிஜன் செறிவூட்டிகளை அவர்களுக்கு கொடுக்கிறார். ‘‘100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பது எனது குறிக்கோள்’’என்று கர்வ் சிங் குரானா கூறுகிறார். நன்கொடை திரட்டி கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொடுத்து உதவும் சிறுவன் கர்வ் சிங் குரானாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x