Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

சென்னை - திருச்சி, ராமேசுவரம் உள்ளிட்ட : 10 சிறப்பு ரயில்கள் நாளை முதல் மீண்டும் இயக்கம் :

கரோனா ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, வரும் 20-ம் தேதி முதல் 10 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் (06865/06866), சென்னை எழும்பூர் - கொல்லம் (06101/06102), சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் (02695/02696), சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா (02696/02639), சென்னை சென்ட்ரல் - மேட்டுபாளையம் (02671/02672), சென்னை எழும்பூர் - ராமேசுவரம் (06851/06852), கோயம்புத்தூர் - நாகர்கோவில் (02667/02668), திருவனந்தபுரம் - மதுரை (06343/06344), மதுரை - புனலூர் (06729/06730), சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி (02653/02654) ஆகிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x