Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைவு :

சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்ததால், சென்னையில் 2-வது நாளாக நேற்றும் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.35 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா பாதிப்பு குறைந்துவருவதால், மேலும் உலக நாடுகளில் பல்வேறு தளர்வு அளித்து தொழில் மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் வழங்குவதால், முதலீட்டாளர்கள் கவனம் திரும்பியுள்ளது. அதன்படி, சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று குறைந்ததால், உள்ளூரிலும் குறைந்தது.

இந்நிலையில், சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.35,680-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம்தங்கம் ரூ.4,460க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4,500க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x