Published : 18 Jun 2021 03:13 AM
Last Updated : 18 Jun 2021 03:13 AM

கல்லூரிகளில் வேலைவாய்ப்புக்கான - யுஜிசியின் வலைதளம் தொடக்கம் :

கல்லூரிகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக யுஜிசி சார்பில்புதிய வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை பதிவேற்றம் செய்ய கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

நாடு முழுவதும் நெட், செட் மற்றும் பிஎச்.டி முடித்து வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் பட்டதாரிகளின் நலன்கருதி யுஜிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு யுஜிசியின் இணையதளத்தில் (www.ugc.ac.in) பட்டதாரிகள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இந்த வலைதளத்தில் ஆசிரியர், பணியாளர் காலிப்பணியிட விவரங்களை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் வெளிப்படைத் தன்மையுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x