Published : 18 Jun 2021 03:13 am

Updated : 18 Jun 2021 03:13 am

 

Published : 18 Jun 2021 03:13 AM
Last Updated : 18 Jun 2021 03:13 AM

தங்கம் பவுனுக்கு ரூ.616 குறைந்தது :

சென்னை

சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.616 குறைந்து, ரூ.36 ஆயிரத் துக்கு விற்கப்பட்டது.

தற்போது கரோனா பரவல் ஓரளவு குறைந்து வருவதால், உலகம் முழுவதும் தொழில், உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு தளர்வுகள், சலுகைகள் அளிக்கப்பட்டு வரு கின்றன.


இதன் காரணமாக, முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தொழில் துறையின் பக்கம் திரும்பியுள்ளது. இதன் விளைவாக, சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று கணிசமாகக் குறைந்தது.

சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4,577, ஒரு பவுன் ரூ.36,616 என விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.77 என பவுனுக்கு ரூ.616 குறைந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.4,500, ஒரு பவுன் ரூ.36 ஆயிரம் என விலை குறைந் துள்ளது.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x