Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM

சர்வதேச யோகா தினம்: : யுஜிசி அறிவுறுத்தல் :

சென்னை

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு (ஜூன் 21) பேராசிரியர்கள், மாணவர்கள் தங்களது வீடுகளில் இருந்தபடி யோகா பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பு ஆண்டுக்கான சர்வதேச யோகா தினம் வரும் திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து அந்த நாளில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி யோகா பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் கிடைப்பதுடன் மன அழுத்தத்தில் இருந்தும் விடுபடலாம். இதுதவிர சமூக வலைதளங்களில் யோகாவின் முக்கியத்துவம் குறித்த தகவல்களை பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x