Published : 18 Jun 2021 03:17 AM
Last Updated : 18 Jun 2021 03:17 AM

18 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு :

பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு சென்னை சென்ட்ரல் - பெங்களூரு உட்பட 18 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப் பட்டுள்ள நிலையில், பயணிகளின் தேவை அடிப்படையில் ரயில்களின் சேவையை ரயில்வே நீட்டித்து வருகிறது.

அந்த வகையில் சென்னை சென்ட்ரல் - பெங்களூரு (02608/02607), மைசூரு - மயிலாடுதுறை (06232/06231), திருநெல்வேலி - மைசூரு (06235/06236), பெங்களூரு - கன்னியாகுமரி (06525/06526) உட்பட மொத்தம் 18 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பயணிக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x