Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM

கல்லணையில் தண்ணீர் திறப்பு :

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். இந்த தண்ணீர் நேற்று முன்தினம் கல்லணையை வந்தடைந்தது. இதையடுத்து கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.சிவசங்கர், மெய்ய நாதன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்.பி. திருச்சி சிவா மற்றும் எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதிக்கு 10 நாட்களில் சென் றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச் சர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x