Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM

கரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 62,224 ஆக குறைந்தது :

மத்திய சுகாதாரத் துறை நேற்றுகாலை 8 மணிக்கு வெளியிட்டபுள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் தினசரி கரோனாதொற்று கடந்த 9 நாட்களாக ஒருலட்சத்துக்கு கீழ் உள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில்கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,224 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியே 96 லட்சத்து 33,105 ஆனது.கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,542 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை மொத்தம் 3 லட்சத்து 79,573 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம் குணமடைவோரின் சதவீதம் 95.80 ஆக உள்ளது.ஒரு வாரமாக தொற்றால் பாதிக்கப் படுவோர் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கிறது.

கடந்த 15-ம் தேதி 60,461 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடந்த மார்ச் 29-ம் தேதிக்குப் பிறகு இந்த எண்ணிக்கைதான் மிகவும் குறைவானது. தற்போது நாட்டில் 8 லட்சத்து 65,432 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 7,628 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சிகிச்சைக்குப் பின்னர் 2 கோடியே 83 லட்சத்து 88,100 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 26 கோடியே 19 லட்சத்து 72,014 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதாரத் துறை கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x