Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM

கோவிஷீல்ட் தடுப்பூசி 2-வது டோஸ் போடுவதற்கு - அறிவியல்பூர்வமாக இடைவெளி அதிகரிப்பு : மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம்

கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாம் டோஸுக்கும் உள்ள இடைவெளியை 6-8 வாரங்களில் இருந்து 12 வாரம் முதல் 16 வாரங்கள் வரை நீட்டிக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்தது. கூடுதல் பலன் கிடைக்கும் என்பதால் கோவிஷீல்ட் தடுப்பூசிக் கான காலம் மாற்றி அமைக்கப்பட்டது.

ஆனால், கோவிஷீல்ட் தடுப்பூசியின் இடைவெளியை குறைப்பதுதான் பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுவதாக அண்மையில் செய்திகள் வெளியாயின.

இதனால் கோவிஷீல்ட் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் மத்தியில், 2-வது டோஸ் செலுத்துவது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், தேசிய நோய்த் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்டிஏஜிஐ) தலைவர் என்.கே.அரோரா அளித்த விளக்கத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது ட்விட்டரில் பக்கத்தில் நேற்று பகிர்ந்து கூறியிருப்பதாவது:

கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ் களுக்கான இடைவெளியை அதிகரிக்கும் முடிவு, வெளிப் படையாகவும் அறிவியல்பூர்வ தரவுகளின் அடிப்படையிலும் எடுக்கப்பட்டதாகும். தரவை மதிப்பீடு செய்வதற்கு இந்தியா வலுவான பொறிமுறையைக் கொண்டுள்ளது. இதுபோன்ற முக்கியமான விஷயத்தை அரசியலாக்குவது துரதிர்ஷ்ட வசமானது.

இவ்வாறு ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

என்டிஏஜிஐ தலைவர் என்.கே. அரோரா அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத் துறையின் நிர்வாக முகமை வெளியிட்ட தரவுகளின்படி, 12 வாரங்கள் இடைவெளி இருக்கும் போது தடுப்பூசியின் செயல்திறன் 65% - 88% வரை வேறுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆல்ஃபா வகைத் தொற்றிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கு இதுவே அடிப்படையாக அமைந்தது.

12 வாரங்கள் இடைவெளியை அவர்கள் பின்பற்றியதால் இங்கிலாந்தினால் மீள முடிந்தது. இடைவெளி அதிகரிக்கும் போது அடினோவெக்டர் தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவதற்கான அடிப்படை அறிவியல் காரணங்கள் இருப்பதால் இது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும் என்று நாங்களும் கருதினோம். எனவே இந்த இடைவெளியை 12-16 வாரங்களாக உயர்த்த மே 13-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அதில் என்.கே. அரோரா கூறியுள்ளார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x