Published : 17 Jun 2021 03:11 am

Updated : 17 Jun 2021 03:11 am

 

Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM

1.13 லட்சம் மரணங்கள் மறைப்பு? - கரோனா உயிரிழப்புகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் : தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதற்காக அறப்போர் தொண்டு நிறுவனத்தின் சார்பில்குடிமக்கள் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது.


இதில், கரோனா உயிரிழப்புகள் தவறானவை என உறுதியாகியுள்ளது. இவ்வாறு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,262 முதல் 8,438 வரை இருக்கலாம் என்று கணிக்க முடிகிறது.ஆனால், அந்த 6 மருத்துவமனைகளில் கடந்த 2 மாதங்களில் 863 பேர் மட்டுமே இறந்ததாக அரசின் அதிகாரப்பூர்வ செய்திவெளியீட்டில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இதன்படி கரோனாவால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அதிகபட்சமாக 1 லட்சத்து 26,126 பேர் உயிரிழந்திருக்க வேண்டும்.

870 பேர் மட்டுமே உயிரிழந் ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 1 லட்சத்து 13,256உயிரிழப்புகள் மறைக்கப்பட்டி ருக்கக்கூடும்.

கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையிலோ, வீட்டிலோ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட வர்கள் உயிரிழந்தவர்கள் அனை வரும் கரோனாவால் உயிரிழந்தவர்களாகவே கருதப்பட வேண் டும். மகாராஷ்டிரம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் திருத்தப்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்திலும் அதேபோல்புதிய அளவீட்டின்படி கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை கணக்கிடப்பட வேண்டும். உதவி களைப் பெற கரோனாவால் உயிரிழந்த அனைத்து குடுபத்தின ருக்கும், அதற்கான உண்மையான காரணங்களுடன் இறப்புச் சான்றி தழ்கள் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தெரி வித்துள்ளார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x