Published : 17 Jun 2021 03:13 AM
Last Updated : 17 Jun 2021 03:13 AM

மழைக் காலத்தில் மின் விபத்துகளை தடுக்க பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல் :

தென்மேற்கு மழைக்காலம் தொடங்கிவிட்டதால், புயல், வெள்ளத்தால் ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க, மக்கள் மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், புயல், வெள்ளம் காரணமாக ஏற்படும் மின் விபத்துகளை தவிர்ப்பதற்கு மக்கள் மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மழையின்போது, மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம். மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு, மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுகவும். மின் கம்பத்திற்காக போடப்பட்டுள்ள ஸ்டே கம்பிகளின் மீது துணிகளை காயவைக்கக் கூடாது.

மின்சார கம்பி அறுந்து கிடந்தால், அதன் அருகே செல்லாமல், அது குறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். மழையின்போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், தொலைபேசி உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம்.

சேலம் மாநகராட்சி மற்றும் ஆத்தூர் நகராட்சி எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும் மின் தடை மற்றும் பழுதுகளை சரி செய்வதற்கு, சேதமடைந்த மின் கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் ஆகியவை குறித்து 94458 51912 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு புகார் அனுப்பலாம்.

சேலம் மின் பகிர்மான வட்டத்தில் மின் தடை பழுது நீக்கும் மையம் 0427- 2414616, 94458 57471, மேற்பார்வை பொறியாளர்கள் சேலம் 94458 52300, சேலம் நகரம் 94458 52300, சேலம் கிழக்கு 94458 52310, சேலம் மேற்கு 94458 52320, சேலம் தெற்கு 94458 52330, வாழப்பாடி 94458 52350, ஆத்தூர் 94458 52340 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x