Published : 17 Jun 2021 03:14 AM
Last Updated : 17 Jun 2021 03:14 AM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் - 55 கீழமை நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் :

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கீழமை மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள 55 பேரை இடமாற்றம் செய்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு பிரிவு பதிவாளராக பணியாற்றி காத்திருப்போர் பட்டியலில் இருந்தநீதிபதி ஆர்.பூர்ணிமா, மாநில போக்குவரத்து மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய நீதிபதி எஸ்.சண்முகவேல், தஞ்சாவூர் மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளராக பணியாற்றி காத்திருப்போர் பட்டியலில் இருந்த நீதிபதி சி.குமரப்பன், சென்னை தொழிலாளர் நீதிமன்ற முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றி காத்திருப்போர் பட்டியலில் இருந்த நீதிபதி எம்.டி.சுமதி, சென்னை குடும்ப நல நீதிமன்ற முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், பூந்தமல்லி குண்டுவெடிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.ஹெச்.முகமது பரூக், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.

சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ.முத்துசாரதா, மதுரை தொழிலாளர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெ.ஏ.கோகிலா, திருச்சி தொழிலாளர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். காரைக்கால் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.சிவகடாட்சம், கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்ற முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற் றிய நீதிபதி ஏ.டி.மரியா கிளேட்சென்னை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்புநீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி, ஓசூர் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய நீதிபதி யு.மோனிகா, தருமபுரி கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும், அங்கு பணியாற்றிய நீதிபதி எம்.ஜீவானந்தம், திருவள்ளூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.புவனேஸ்வரி, கடலூர் குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளராக பணியாற்றி காத்திருப்போர் பட்டியலில் இருந்த வி.தங்கமாரியப்பன், சென்னை முதலாவது கூடுதல்குடும்ப நல நீதிமன்ற நீதிபதி யாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணிபுரிந்த நீதிபதி ஜெ.சாந்தி, வேலூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணிபுரிந்த நீதிபதி எம்.வெற்றிசெல்வி, செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜெ.செல்வநாதன், புதுச்சேரி முதன்மை நீதிபதியாகவும், திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற விரைவு நீதிபதி ஆர்.பரணிதரன், புதுச்சேரி தொழிலக தீர்ப்பாயம் மற்றும் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 55 கீழமை நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x