Published : 16 Jun 2021 03:14 am

Updated : 16 Jun 2021 03:14 am

 

Published : 16 Jun 2021 03:14 AM
Last Updated : 16 Jun 2021 03:14 AM

அரியலூர் மாவட்டத்தில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது :

அரியலூர்: கரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தபோது, அரியலூர் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்ற பலரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். அதன்படி, கைது செய்யப்பட்டிருந்த மலத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த வேளாங்கண்ணி ராபர்ட்(36), பாலகுமார்(24), ராமதேவநல்லூர் கார்த்திக்(41), சுத்துகுளம் விவேக்(30), குளத்தூர் ரகுபதி(31), தொடர் மணல் திருட்டில் ஈடுபட்ட ஆண்டிமடத்தை அடுத்த நெட்டலக்குறிச்சியை சேர்ந்த பாரதி(30) ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்திருந்தார். அதன் பேரில், 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் த.ரத்னா நேற்று உத்தரவிட்டார்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x