Published : 15 Jun 2021 03:12 AM
Last Updated : 15 Jun 2021 03:12 AM

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் - பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்கியது : உற்சாகத்துடன் வந்த மாணவ, மாணவிகள்

சென்னை தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை அரசு பள்ளியில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்காக நீண்ட வரிசையில் நிற்கும் மாணவ, மாணவிகள். படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைநேற்று தொடங்கியது. மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் உற்சாகத்தோடு பள்ளிக்கு வந்து, தாங்கள் விரும்பிய பாடப் பிரிவுகளில் சேர்க்கை பெற்றனர்.

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் (2020-21) கரோனா பரவல் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டில்10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படாததால் 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, அரசு மற்றும்அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்சேர்க்கை ஜூன் 14-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளிலும் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நேற்றுதொடங்கியது. மாணவ, மாணவிகளும், பெற்றோரும் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வந்தனர். பள்ளியில் தரப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.

ஏற்கெனவே அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், அவர்கள் கேட்ட பாடப்பிரிவுக்கு உடனடியாக சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. பிற பள்ளிகளில் படித்தவர்களுக்கும் இடங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடப் பிரிவுகள் ஒதுக்கப்படுகின்றன. பல மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். கரோனா பரவல்காரணமாக ஒவ்வொரு பாடப் பிரிவிலும் கூடுதலாக 15 சதவீதம் வரை மாணவர்களை சேர்க்க அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னையில் அரசு, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கூட்டம் அலைமோதியது. அசோக் நகர் அரசுமகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை பணிகளை பள்ளிக் கல்வி அமைச்சர்அன்பில் மகேஸ் ஆய்வு செய்தார். பின்னர் மாணவிகளுக்கு சேர்க்கைகடிதத்தை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான (2021-22) மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. பிளஸ் 1 மட்டுமின்றி 1, 6, 9-ம் வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கரோனா பாதிப்புஅதிகம் உள்ள 11 மாவட்டங்களில் மட்டும் மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை.

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ‘ஆல் பாஸ்’ (All Pass) என்றுதான் குறிப்பிட்டு வழங்க உள்ளோம்.தற்போதைய நிலையில் 9-ம் வகுப்புமதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1சேர்க்கை நடைபெறுகிறது. தனியார்பள்ளிகளில் இருந்தும் பல மாணவ,மாணவிகள் அரசு பள்ளிகளில் ஆர்வமுடன் சேர்கின்றனர்.

பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து எதுவும்யோசிக்கவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்படுவது தொடரும். ஆன்லைன் கல்விக்கான வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் விரைவில் வெளியிடுவார். மாணவர்களுக்கான இலவச பாடப் புத்தகங்கள் அனைத்துமாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன. விரைவில் வழங்கப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தை டிஎன்பிஎஸ்சியுடன் இணைக்கும் திட்டம் இல்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படாது. அந்த வாரியத்தை மறுகட்டமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x