Published : 15 Jun 2021 03:12 AM
Last Updated : 15 Jun 2021 03:12 AM

தமிழக அரசின் - டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏகேஎஸ் விஜயன் நியமனம் :

சென்னை

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக திமுக முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம் குறித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பதவி ஓராண்டுக்கு தற்காலிகமாக உருவாக்கப்படுகிறது. அப்பதவியில் நாடாளுமன்ற முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்படுகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே.எஸ்.விஜயன்,நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மக்களவைக்கு 3 முறை தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார். இவர் ஓராண்டுக்கு பணியாற்றுவார். வரும் 17-ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார். இந்நிலையில், சிறப்பு பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளது குறி்ப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x