Published : 15 Jun 2021 03:13 AM
Last Updated : 15 Jun 2021 03:13 AM

புதுவை பேரவைத் தலைவர் பதவிக்கு - பாஜக எம்எல்ஏ போட்டியின்றி தேர்வாகிறார் :

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாஜக எம்எல்ஏ செல்வம் முதல்வர் ரங்கசாமி மற்றும் தனது கட்சியின ருடன் சென்று சட்டப்பேரவை செயலர் முனிசாமியிடம் நேற்று மனுத்தாக்கல் செய்தார்.

புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் தேர்தலுக்காக முதல்வர் மற்றும் கட்சியினருடன் சென்று சட்டப்பேரவை செயலரிடம் பாஜக எம்எல்ஏ செல்வம் நேற்று மனுத்தாக்கல் செய்தார். இவர் போட்டியின்றி பேரவைத் தலைவராக தேர்வாக உள்ளார்.

புதுவை சட்டப்பேரவைத் தலைவர் தேர்தல் நாளை (ஜூன் 16) நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணியில் சட்டப்பேரவைத் தலைவர் வேட்பாளராக மணவெளி தொகுதியில் வென்ற பாஜக எம்எல்ஏ செல்வம் போட்டியிடுகிறார்.

செல்வத்தின் வேட்புமனுவை முதல்வர் ரங்கசாமி முன்மொழிந்தும், பாஜக சட்டமன்ற கட்சித்தலைவர் நமச்சிவாயம் வழிமொழிந்திருந்தார். என்ஆர்.காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் கையெழுத் திட்ட மனுவை செல்வம் தாக்கல் செய்தார். வேட்புமனுவை சட்டப்பேரவை செயலர் முனிசாமி பெற்றுக்கொண்டார்.

வேட்புமனு தாக்கலின்போது முதல்வர் ரங்கசாமி, பாஜக சட்டப்பேரவை கட்சித்தலைவர் நமச்சிவாயம், பாஜக மாநில தலைவர் சாமிநாதன், அதிமுக செயலாளர்கள் அன்பழகன், ஓம்சக்திசேகர், என்ஆர்.காங்கிரஸ்,பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். இன்று மதியம் 12 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடி வடைகிறது.

தேர்தல் தொடர்பாக பேரவைவட்டாரங்களில் கூறுகையில்," தேர்தலில் போட்டி இருக்கும் பட்சத்தில் நாளை கூடும் சட்டப்பே ரவையில் தற்காலிக பேரவைத் தலைவர் லட்சுமிநாராயணன், தேர்தலை நடத்துவார். குரல் வாக்கெடுப்பு முறையில் தேர்தல்நடைபெறும்.

தேர்தலில் போட்டியில்லாத பட்சத்தில் செல்வம் பேரவைத் தலைவராக பதவியேற்பார். அவரை முதல்வர், எதிர்கட்சித்தலைவர் ஆகியோர் அழைத்துச் சென்று பேரவைத் தலைவர் இருக்கையில் அமர வைப்பர்" என்று குறிப்பிட்டனர்..

இப்போது புதுவை சட்டசபையில் என்ஆர்.காங்கிரஸ், பாஜவுக்கு 16 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. இதுதவிர இந்த கூட்டணிக்கு 3 சுயேட்சைகள், 3 நியமன எம்எல்ஏக்கள் ஆதரவும் உள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக 22 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. எதிர்கட்சிகளான திமுகவுக்கு 6, காங்கிரசுக்கு 2 என 8 எம்எல்ஏக்கள் பலம்தான் உள்ளது.

இதனால் பேரவைத் தலைவர் தேர்தலில் போட்டி இருக்காது. அதனால் போட்டியின்றி பாஜக எம்எல்ஏ முதல்முறையாக பேரவைத் தலைவராகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x