Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM

‘சோனி லைவ்’ தமிழ் அறிமுகம் :

தமிழில் ‘சோனி லைவ்’ ஓடிடி தளம் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதை நிர்வகிக்கும் பொறுப்பைஏற்றுள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன். திரையரங்கில் படம் வெளியாகாத இந்த கரோனா காலகட்டத்தை, ஓடிடி தளங்கள் வெகுவாக பயன்படுத்தி திரைப்படங்கள், வெப் சீரீஸ்களை வெளியிட்டு கவனம் ஈர்க்கின்றன. அந்த வரிசையில் சோனி லைவ் நிறுவனம் தமிழில் ‘தேன்’ திரைப்படத்தை விரைவில் வெளியிட உள்ளது. இதையடுத்து, அரவிந்த்சாமி, ஸ்ரேயா, ஆத்மிகா உள்ளிட்டோர் நடிக்கும் ‘நரகாசூரன்’, ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்களின் பிரிமியர் (முதல்முறை) காட்சிகளையும் வெளியிட உள்ளது. அடுத்தடுத்து 10 தமிழ் படங்களின் உரிமைகளையும் பெற்று வைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x