Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM

ஹாட் ஸ்டாரில் ‘பொன் மாணிக்கவேல்’ :

பிரபுதேவா அடுத்து இந்தியில் ஒரு படம் இயக்கும் திட்டத்திலும், தமிழில் அடுத்தடுத்து நடிக்கும் படங்களுக்கான கதைகள் கேட்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.இதற்கிடையே, அவர் நடித்துள்ள ‘பொன் மாணிக்கவேல்’, ‘யங் மங் சங்’, ‘பஹிரா’ உள்ளிட்ட படங்கள்வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. இதில்,காவல் துறை பின்னணியில் ஏ.சி.முகில் செல்லப்பன் இயக்கத்தில் நிவேதா பெத்துராஜ், சூரி உள்ளிட்டோருடன் பிரபுதேவா நடித்துள்ள ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படத்தை ஹாட் ஸ்டார் ஓடிடி நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் படக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள வேறு சில படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x