Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM

தேவை புதிய பார்வை :

ஜூன் 13 அன்று ‘வானவில் அரங்கம்’ பகுதியில் வெளியான ‘கோயில்களை ஏன் பாதுகாக்க வேண்டும்?’ கட்டுரை ஓர் அழகியல் வார்ப்பு. கோயில்கள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கான அத்தனைத் தேவைகளும் நீதிமன்றத் தீர்ப்பின் வழி நின்று செவ்வனே பட்டியலிடப்பட்டிருந்தன. கோயில்களெல்லாம் மதம், நம்பிக்கைகள், பண்பாடு, கலாச்சாரம், கலை, இலக்கியம், சிற்ப சாஸ்திரம், மருத்துவம், தானியக் களஞ்சியம், நிலப் பராமரிப்பு, பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் அரண் என்று எண்ணற்ற வழிகளில் சமூகத் தொண்டாற்றும் சமூக நிறுவனங்கள் ஆகும். மன்னர்களின் ஆட்சிமுறை கோயில்களை மையப்படுத்தியே சுழன்றது. கோயில்களெல்லாம் பண்பாட்டுப் புதையல்களாகும். ஆதி காலம்தொட்டே கோயில்கள்தான் சரித்திரப் பதிவேட்டின் மையமாக இருந்துள்ளன. இலக்கிய வரிகளை மேற்கோள் காட்டி, நீதியரசர்கள் அரங்க.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் எழுதியிருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை நீதிமன்றம் சார்ந்த பணி மட்டுமே என்று எளிதில் கடந்து போய்விட முடியாது. கோயில்களில் இருக்கும் கலைப் பொக்கிஷங்கள், பழந்தமிழேடுகள், சமயச் சார்புள்ள ஆவணங்கள், நிலங்கள் என்று அனைத்தையும் செவ்வனே பட்டியலிட்டுப் பாதுகாக்கவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும் தனிப் பல்கலைக்கழகம் போன்றதொரு அமைப்பு காலத்தின் கட்டாயம். புதிய அரசு, புதிய பார்வை கொண்டு இதை அணுக வேண்டும்.

- கரு.பாலகிருஷ்ணன், துறைத் தலைவர், அறிவியல் புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x