Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM

டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு : வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், தமிழக அரசு மாநிலம் முழுவதும் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தமிழகம்முழுவதும் தொற்று குறைந்துள்ள,சென்னை உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சென்னை உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட உள்ளன.

இதையொட்டி, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறையில், மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களுக்கும், மதுபானம்வாங்க வருவோருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x