Published : 13 Jun 2021 03:11 AM
Last Updated : 13 Jun 2021 03:11 AM

போலந்து மல்யுத்தம்: தங்கம் வென்றார் வினேஷ் போகத் :

போலந்து ஓபன் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வென்றார்.

போலந்தின் வார்சா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான 53கிலோ எடைப் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் வினேஷ் போகத், உக்ரைனின் கிறிஸ்டினா பெரேஸாவுடன் மோதினார்.இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் 8-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். 26 வயதான வினேஷ் போகத் இந்த சீசனில் வெல்லும் 3-வது தங்கப் பதக்கம் இதுவாகும். அவர் ஏற்கெனவே கடந்த மார்ச்சில் நடைபெற்ற மேட்டியோ பெல்லிகோன் தொடரிலும், ஏப்ரலில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் ஷிப்பிலும்தங்கம் வென்றிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x