Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM

மின்பயன்பாட்டு கட்டணம் அறிய வாட்ஸ்-அப் எண்கள் அறிவிப்பு :

கோவை மாநகர் வட்டத்தில் மின் பயன்பாட்டை சுய கணக்கீடு செய்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள ‘வாட்ஸ்-அப்’ எண்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முழு ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ளதால் மின்வாரிய ஊழியர்கள் வழக்கம்போல வீடு, வீடாகச் சென்று மின் பயன்பாட்டை கணக்கீடு செய்ய முடியாத நிலை உள்ளது. கடந்த 2019 மே, ஜூன் மாதத்தின் மின் பயன்பாட்டின் அடிப்படையில் மின் கட்டணத்தை நிர்ணயிக்க மின்வாரியம் முடிவெடுத்துள்ளது.

இதில், விருப்பம் இல்லாதவர் கள் நடப்பு மாதத்தின் மின் கணக்கீட்டை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பலாம். அதன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

எனவே, அந்தந்த பகுதி மக்கள், தங்கள் வீட்டின் பத்து இலக்க மின் இணைப்பு எண் மற்றும் மின் மீட்டரின் அளவீட்டை தெளிவாக புகைப்படம் எடுத்து தங்கள் பகுதிக்கான வாட்ஸ்-அப் எண்ணில் அனுப்பலாம்.

அதன்படி, டவுன்ஹால் (89038 50626), கடைவீதி கிழக்கு (97888 79830), கடைவீதி மேற்கு (94435 16627), ரேஸ்கோர்ஸ் (98659 12222), புலியகுளம் (98401 63544), ராமநாதபுரம் (98422 33953), மையம் (76396 67587), பாப்பநாயக்கன்பாளையம் (94439 16074), ஆர்.எஸ்.புரம் தெற்கு (99445 72070), ஆர்.எஸ்.புரம் வடக்கு (97888 50145), டாடாபாத் (90036 47221), ராம்நகர் (90036 47221), மைய உபகோட்டம் (99439 93396), டாடாபாத் (94863 24454), உக்கடம் (94891 10923), செல்வபுரம் (94423 48275), லாலிசாலை (94423 48275), பொன்னையராஜபுரம் (82484 11708), கே.எஸ்.நகர் (97888 79830), ரேஸ்கோர்ஸ் (90038 82262), வேலாண்டிபாளையம் (94458 51340, 90809 03575), கவுண்டம்பாளையம் (94458 51336, 96295 50535), ரத்தினபுரி (94458 51335), ஆவாரம்பாளையம் (94458 51347, 98945 07324), சாய்பாபாகாலனி (94458 51337, 94435 06793), சங்கனூர் (94458 51334, 98427 80119), கணபதி (94458 51345, 99443 55537), தண்ணீர்பந்தல் (94458 51348, 97904 17054), இடையர்பாளையம் (94458 51339, 94878 99466), கணேஷ்நகர் (94458 51338, 93622 35451), பீளமேடு (98422 61104), கவுண்டம்பாளையம் தெற்கு (94454 42443), காந்திமாநகர் பகுதி மக்கள் (94454 42432, 96777 34574) என்ற எண்களிலும் அனுப்பலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x