Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM

மதுரையில் நூறுக்கு கீழ் குறைந்த : கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை :

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறியதாவது:

கரோனா இரண்டாவது அலையின்போது மார்ச் இரண்டாவது வாரத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. மாநகராட்சி பகுதியில் மே மாதம் 20-ம் தேதி அதிகபட்சமாக 1,038 பேர் கரோனாவால் பாதிக்கப் பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி சார்பில் நூறு வார்டுகளில் தினமும் 170 காய்ச்சல் மற்றும் கரோனா மாதிரி பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. இங்கு தினமும் 5,500 முதல் 6,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த மார்ச் முதல் இன்று வரை 15,601 முகாம்கள் நடத்தப்பட்டு 3,52,083 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் காய்ச்சல் கண்டறியும் முகாம் மற்றும் கரோனா பரிசோதனை முகாம் நடத்தியதன் மூலம் தொற்று உள்ளவர்களை முன்கூட்டியே கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டனர். இதன் மூலம் தொற்று பெருமளவு கட்டுக்குள் வந்துள்ளது.

தற்போது ஒருநாள் தொற்று நூறுக்கும் கீழ் குறைந்து 90 ஆகியுள்ளது. மதுரை மாநகராட்சியின் 842 842 5000 என்ற இலவச அழைப்பு எண்ணில் தொடர்பு கொண்டு கரோனா பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடத்தை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x