Published : 12 Jun 2021 07:00 AM
Last Updated : 12 Jun 2021 07:00 AM

ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு - ஜூலை 1 முதல் புதிய விதிமுறைகள் : சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

சென்னை

அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிமையங்களுக்கான புதிய விதிமுறைகள் வரும் ஜூலை 1 முதல் அமலாகும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கான விதிகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் 2021 ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். இது ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பழக வருவோருக்கு முறையான பயிற்சி, டிரைவிங் தொடர்பான அறிவைப் பெற உதவும்.

அதன்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் ஓட்டுநர் பழக வருவோர்களுக்கு தரமான பயிற்சியை வழங்க, இந்தமையங்கள் ‘சிமுலேட்டர்’- வாகனம் போன்ற வடிவமைப்பு, ஓட்டுநர் பழகுவதற்கான பிரத்யேக பாதை ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் புத்தாக்கப் படிப்பு மற்றும் பயிற்சி வசதிகள் கிடைக்க வேண்டும்.

இந்த மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்களுக்கு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது, ஓட்டுநர் பரிசோதனை தேர்வில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர்பயிற்சி மையத்தில் பயிற்சியைமுடித்தாலே அந்த ஓட்டுநருக்கு உரிமம் கிடைத்துவிடும். இந்த ஓட்டுநர்மையங்கள்,தொழில்ரீதியான சிறப்பு பயிற்சியை அளிக்கவும் அனுமதிக்கப்படுகின்றன.

சாலை விதிமுறைகள் பற்றிபோதிய விழிப்புணர்வு இல்லாததால்தான் சாலை விபத்துகள் அதிக அளவில் நிகழ்கின்றன. இந்தபுதிய விதிமுறைகளால் அவை குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x