Published : 12 Jun 2021 07:00 AM
Last Updated : 12 Jun 2021 07:00 AM

முதல்வர் 16-ம் தேதி டெல்லி பயணம் : குடியரசுத் தலைவர், பிரதமரை சந்திக்க திட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும்16-ம் தேதி டெல்லி செல்ல உள்ளார். அங்கு குடியரசுத் தலைவர், பிரதமர்உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக முதல்வராக கடந்த மே7-ம் தேதி மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். கரோனா காலம் என்பதால், தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், வரும் 16-ம் தேதிஇரவு தனி விமானத்தில் டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், மறுநாள் (ஜூன் 17) குடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி,அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமருடனான சந்திப்பின்போது, தடுப்பூசி விநியோகம், செங்கல்பட்டு தடுப்பூசி மையம், நீட் உள்ளிட்டவை குறித்து முதல்வர் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x