Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM

ராமர் கோயில் அஸ்திவார பணி விரைவில் முடியும் :

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டுவதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ.1,100 கோடியில் நடைபெறும் கட்டுமானத்தை ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் கோயில் அஸ்திவாரப் பணிகள் வரும் அக்டோபரில் நிறைவடையும் என்று ராமர் கோயில் அறக் கட்டளை தெரிவித்துள்ளது.

மேலும் வரும் டிசம்பர் முதல் கோயில் கட்டுமானப் பணிகளின் 2-வது கட்டமாக கோயிலைத் தாங்கும் தூண்களை நிறுத்தும் பணிகள் நடைபெற உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x