Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM

மதுக்கடைகள் திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் : எல்.முருகன், ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை

மதுக்கடைகள் திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

எல்.முருகன்: கடந்த ஆண்டுகரோனா நோய் தொற்றின்போது மதுக்கடைகளை மூட வேண்டும்என்று திமுக போராடியது. திமுகமகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, ‘திமுக ஆட்சிக்கு வந்தால்மது ஆலைகளையே மூடுவோம்’ என்றார்.

மதுக்கடைகளை மூடினால் அரசின் வருவாய் பாதிக்கப்படும் என்பதையே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டு இருக்க முடியாது. மதுக்கடைகள் மூடப்பட்டால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ஏராளமான வழிகள் உள்ளன.

தற்போது கரோனா அபாயம்குறைந்து வருகிறது என்பதால் பல மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க தயாராகி வருவது பேராபத்தில் முடியும். கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மதுப்பழக்கம் துறந்து தங்கள் குடும்பத்துடன் அமைதியாக வாழும்மக்களை, மீண்டும் மதுப் பழக்கத்தில் ஆழ்த்த முயலும் இந்த அபத்தமான முடிவை எதிர்ப்போம்.

ராமதாஸ்: ஊரடங்கு தளர்வுகளின் ஒரு கட்டமாக தமிழகத்தில் மதுக்கடைகளை காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை திறக்கதமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

மக்கள் நலனுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தினசரி கரோனா வைரஸ் பரவல் குறையும் விகிதம் கடந்த 4 நாட்களாக படிப்படியாக சரிந்து வருகிறது. இத்தகைய சூழலில் மதுக்கடைகளை திறப்பது கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும்.

கடந்த ஆட்சியில் இத்தகைய போக்கை விமர்சித்த திமுக, இப்போது அதே தவறை செய்யலாமா.

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே. மதுக்கடைகள் திறக்கப்பட்டால் ஏழைக் குடும்பங்களுக்கு கிடைக்கும் மிகக் குறைந்த வருமானமும் பறிபோய்விடும். குடும்பங்களில் வறுமை அதிகரிக்கும். வன்கொடுமை பெருகும். இவற்றைத் தடுக்க தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x