Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM

எல்ஐசி தலைவரின் பதவிக்காலம் நீட்டிப்பு :

ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்ஐசி) தலைவர் எம்.ஆர்.குமாரின் பதவிக்காலத்தை 2022 மார்ச் 13-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அமைச்சரவை நியமனக் குழு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி:

எல்ஐசி நிறுவனத்தில் 1983-ல் பணியில் சேர்ந்த எம்.ஆர்.குமார் தெற்கு, வடக்கு மற்றும் வடக்கு மத்திய மண்டலங்களின் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். இவர் கடந்த 2019 மார்ச் 13-ல் எல்ஐசி தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் ஜூன் 30-ல் முடிவடைய இருந்த நிலையில், 2022 மார்ச் 13 வரை பதவியை நீட்டித்து மத்திய அமைச்சரவை நியமனக் குழு தற்போது உத்தரவிட்டுள்ளது.

எல்ஐசி 2021-22 ஆண்டில் பங்குச் சந்தையில் நுழைய உள்ளது. முழுக்க மத்திய அரசுக்கு சொந்தமான எல்ஐசியின் 10 சதவீத பங்குகளை பங்கு வெளியீட்டின் மூலம் விற்று ரூ.1 லட்சம் கோடிக்கு நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மிகப்பெரிய பங்கு வெளியீட்டுக்குஎல்ஐசி தயாராகி வரும் நிலையில், எல்ஐசி தலைவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீடு நடைபெற்றால், நாட்டின் மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸைவிட பெரிதாக இருக்கும் என கூறப்படுகிறது. l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x