Published : 11 Jun 2021 03:12 AM
Last Updated : 11 Jun 2021 03:12 AM

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு - ரெம்டெசிவிரை பயன்படுத்த தடை : புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

பெங்களூரு கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் வீரர், வீராங்கனைகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒரு வீராங்கனைக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. படம்: பிடிஐ

புதுடெல்லி

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு ரெம்டெசிவிர் மருந் தைக் கொண்டு சிகிச்சை அளிக்கக் கூடாது என மத்திய அரசு வெளி யிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறி முறைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு பரவிய கரோனா முதல் அலையில் பெரும்பாலும் 40 வயதை கடந்த வர்களே அதிக அளவில் பாதிப் புக்கு உள்ளாகினர். ஆனால், தற் போது ஏற்பட்டுள்ள பெருந்தொற் றின் இரண்டாம் அலையில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களும், குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுவது தெரியவந்தது.

ஆரம்ப காலகட்டத்தில், பெரிய வர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைதான் சிறார்களுக்கும் அளிக் கப்பட்டது. ஆனால், இதுபோன்ற சிகிச்சைகள், சிறார்களுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக சமீபத்திய ஆய்வறிக்கைகள் தெரி வித்தன. இதன் அடிப்படையில், சிறார்களுக்கான கரோனா சிகிச்சை முறைகளில் மத்திய அரசு அவ்வப்போது பல்வேறு மாற்றங்களை செய்து வந்தது.

இந்நிலையில், சிறார்களுக்கான கரோனா சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் ரெம்டெசிவிர் மருந்தை வழங்கக் கூடாது. தொற்று அறிகுறிகள் அதிக மானால் மட்டுமே சி.டி. ஸ்கேன் பரிசோதனைக்கு பரிந்துரைக்க வேண்டும்.

அறிகுறிகள் இல்லாத நிலையில் கரோனாவால் பாதிக்கப்படும் சிறார்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் கண் காணிப் பில் இருக்க வேண்டும். கரோனா தொற்றுக்காக அவர்களுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்க வேண் டாம். மாறாக, அவர்களுக்கு இருக் கும் மற்ற பிரச்சினைகளுக்கு (இருமல், தலை வலி உள்ளிட் டவை) மருந்துகள் வழங்கலாம். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை, அறிகுறி கள் மோசமாகும் பட்சத்தில் மருத் துவரின் ஆலோசனையை கட் டாயம் பெற வேண்டும்.

லேசான அறிகுறி...

லேசான அறிகுறிகளுடன் கூடிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்களுக்கு காய்ச்சலைக் குறைக்க 10 அல்லது 15 எம்.ஜி. பாராசிட்டமல் மாத்திரைகளை 4 முதல் 6 மணிநேர இடைவெளியில் வழங்கலாம். மிதமான வெந்நீரில் உப்பைக் கலந்து கொப்பளிக்க செய்வது அவசியம். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கரோனாவுக்கான வழக்கமான மருந்துகளை கொடுக் கக் கூடாது. குறிப்பாக, நுண் ணுயிர் தொற்றுக்கு எதிரான மருந்துகளை வழங்கக் கூடாது. சிறார்களின் சுவாசத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உடல் நீல நிறமாக மாறுகிறதா, அதிக சளி இருக்கிறதா, சிறுநீர் கழிப்பதில் ஏதேனும் சிரமம் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.

இதேபோல, மிதமான அறிகுறி களுடன் கூடிய கரோனா தொற் றுக்கு உள்ளாகிய சிறார்களுக்கு உடனடியாக ஆக்சிஜன் உதவி யுடன் சிகிச்சை அளிக்க வேண் டும். உடலில் நீர்ச்சத்து மற்றும் சோடியம், பொட்டாசியம் உப்பு களின் சமநிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஒரு வேளை, உணவு உட்கொள்ள முடியவில்லை என்றால் நரம்பு களின் வழியாக சத்து திரவத்தை செலுத்த வேண்டும். அறிகுறிகள் மோசமானால் மட்டும் ஸ்டீராய்டு மருந்துகளை வழங்கலாம். தேவைப்பட்டால் ஒழிய, ரத்த உறைவை சீர்செய்யும் மருந்து களை கொடுக்க வேண்டாம். 100.4 பாரன்ஹீட்டுக்கு மேல் உடல் வெப்பநிலை சென்றால் பாராசிட்டமல் மாத்திரைகளை கொடுக்கலாம். இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x