Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

முன்னணி நிறுவனங்களில் பணியாற்ற - எஸ்ஆர்எம் வளாகத் தேர்வில் 7,111 மாணவ, மாணவிகள் தேர்வு :

எஸ்ஆர்எம்ஐஎஸ்டி வளாகத் தேர்வில் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இதுவரை 7,111 மாணவ, மாணவிகளை பல்வேறு பணிகளுக்காக தேர்வு செய்துள்ளன.

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (எஸ்ஆர்எம்ஐஎஸ்டி) நாட்டில் உள்ள முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது நாக் (NAAC)அமைப்பின் உயரிய A மற்றும் 12B பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற நிறுவனமாகும்.

இங்கிலாந்து நாட்டின் QSஅமைப்பால் சர்வதேச அளவில் சிறந்த உயர்கல்வி நிறுவனத்துக்கு வழங்கப்படும் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற நிறுவனமாக விளங்குகிறது.

எஸ்ஆர்எம்ஐஎஸ்டி-யில்பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து, முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

2020-21 கல்வியாண்டில் பயின்றவர்களின் பணி நியமனத்துக்காக நடத்தப்பட்ட வளாகத் தேர்வில் ஒர்க் இந்தியா, மோட்டார் க்யூ, அமேசான், டிஇ ஷா, நீல்சன், பேபால், பார்க்ளேஸ், டிலொடி, பேங்க் ஆப் அமெரிக்கா, அடோப் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இதுவரை 7,111 மாணவ மாணவிகளை பணிக்காக தேர்வு செய்துள்ளன.

இந்த பணி நியமன வளாகத்தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட ஊதியத்திலும், வொர்க் இந்தியா ஐ.டி. நிறுவனம் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.35 லட்சம்சம்பளத்துடனும் நியமனம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் தொழில் வழிகாட்டி மையஇயக்குநர் என்.வெங்கட சாஸ்திரி வெளியிட்ட செய்திக்குறிப்பில்இவ்வாறு கூறப்பட்டுள்ளது. l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x