Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

‘தவணையை செலுத்த மகளிர் குழுக்களைவற்புறுத்தக்கூடாது' :

உதகை

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளி யிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் அனைவரும் வாழ் வாதாரத்தை இழந்துள்ளனர்.

தற்போதைய சூழலில், நீலகிரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியுள்ள நுண் நிதி வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் மூலமாக,கடன் தவணையை செலுத்தகட்டாயப்படுத்தக்கூடாது. மேலும், பேரிடர் காலத்தில் வீடுகளுக்குச் சென்று தவணைத் தொகை செலுத்துமாறு நிர்பந்திக்கக்கூடாது. இதுதொடர்பாக புகார் ஏதேனும் இருந்தால் 1800 1021 080,0423-2444430 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x