Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

சவுதியில் தொழிலாளி இறந்ததை மறைத்த கட்டுமான நிறுவனம் : சிவகங்கை ஆட்சியரிடம் மனைவி புகார்

சவுதி அரேபியாவில் பணிபு ரிந்த தனது கணவர் இறந்த விவரத்தைத் தெரிவிக்காமல் கட்டுமான நிறுவனம் மறைத்து விட்டதாக சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி புகார் தெரிவித்தார்.

மானாமதுரை அருகே டி.ஆலங் குளத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் ராஜேஸ்வரன் (35). இவரு க்கு சவுந்தரம் (25) என்ற மனைவியும், ஜெகதீஸ்வரன் (5), யோகேஸ் வரன் (3) என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக, கடன் வாங்கிக்கொண்டு கடந்த 2018 ஜூன் 31-ம் தேதி சவுதி அரேபியா நாட்டுக்கு வேலைக்குச் சென்றார்.

அங்குள்ள கட்டுமான நிறுவ னத்தில் கம்பி கட்டும் வேலை செய்தார். இந்நிலையில் ஜூன் 2-ம் தேதி பணியில் இருந்தபோது அவர் மீது கான்கிரீட் தடுப்பு விழுந்து இறந்தார்.

இதுகுறித்து அங்கு பணிபுரி வோர், ராஜேஸ்வரன் மனைவி சவுந்தரத்துக்கு தகவல் தெரிவித் துள்ளனர்.

ஆனால் கட்டுமான நிறுவனமோ ராஜேஸ்வரன் இறந்ததை தெரி விக்காமல் மறைத்துவிட்டது. இதையடுத்து இறந்த தனது கணவரின் உடலை மீட்டு இந்தியா கொண்டுவர வேண்டும். இறப்பை மறைத்த கட்டுமான நிறுவனத்திடம் இருந்து நிவாரணம் பெற்றுத்தர வேண்டுமென தனது 2 குழந்தைகளுடன் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் கண் ணீருடன் மனு கொடுத்தார்.

சவுந்தரம் கூறுகையில், எனது கணவர் வெளிநாடு சென்று 3 ஆண்டுகளாகிவிட்டது. ஒரு முறையாவது அவரது முகத்தைப் பார்க்க வேண்டும். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x