Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM

மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்

மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்க திட்டமிடுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.ரிஷபம்: கனவுத் தொல்லையால் தூக்கம் கெடும். அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்தும். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்து விடாதீர்கள். வாகனம் செலவு வைக்கும்.மிதுனம்: எதிர்மறை எண்ணங்கள் வரும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சின்னச் சின்ன சச்சரவுகள் ஏற்படக் கூடும்.கடகம்: பணப்புழக்கம் கணிசமாக உயரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். செல்லும் இடமெல்லாம் சிறப்பு கூடும். வீட்டில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும்.சிம்மம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். முக்கிய பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள்.கன்னி: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத தொகை ஒன்று கைக்கு வரும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.துலாம்: வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பிள்ளைகளுடன் வாக்குவாதம் ஏற்படக் கூடும். பணப்பற்றாக்குறையை சமாளிக்க போராட வேண்டியிருக்கும். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.விருச்சிகம்: கல்யாணப் பேச்சுவார்த்தை நம்பிக்கை தரும். உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவார்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள்.தனுசு: அக்கம்பக்கத்து வீட்டாருடன் இருந்துவந்த மோதல் போக்கு நீங்கும். சகோதரர்களுக்கிடையே மனம்விட்டு பேசி நல்ல முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.மகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். தைரியமாக, தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தினருடன் புண்ணிய தலங்களுக்குச் செல்ல திட்டமிடுவீர்கள்.கும்பம்: மனக்குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கும். எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது போன்ற முயற்சிகளில் இருந்த தடை நீங்கும்.மீனம்: ஆடை, ஆபரணங்கள் சேரும். கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். கடன் தொகையை திருப்பி செலுத்த வழி பிறக்கும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x