Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள - 3.43 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்களின் ஆவணங்கள் ஆன்லைனில் வெளியீடு : உரிமை ஆவணங்கள் கோயில் பெயரிலேயே இருக்க நடவடிக்கை

இந்துசமய அறநிலையத் துறைகட்டுப்பாட்டில் உள்ள 3 லட்சத்து43 ஆயிரத்து 647 ஏக்கர் கோயில்நிலங்களின் ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமான நிலங்கள் 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் ஆகும். இந்நிலங்களின் உரிமை ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரு கின்றன.

3 இனங்களாக வகைப்பாடு

கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள ‘தமிழ் நிலம்’மென்பொருளோடு ஒப்பீடு செய்யப்பட்டு முழுவதும் ஒருமித்த இனங்கள், பகுதியாக ஒருமித்த இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என 3 இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றுள் தற்போது முதல்கட்டமாக 3 லட்சத்து 43 ஆயிரத்து 647 ஏக்கர் நிலங்கள் முழுவதும் ஒருமித்த இனங்களாகக் கண்டறியப்பட்டு அந்நிலங்களின் ‘அ’ பதிவேடு, நகர நில அளவை பதிவேடு, சிட்டா ஆகியவை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் (http://hrce.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

பதிவிறக்கம் செய்யலாம்

இது மொத்தமுள்ள நிலங்களில்72 சதவீதம் ஆகும். பொதுமக்கள் அந்த இணையதளத்தில் ‘திருக்கோயில் நிலங்கள்’ என்ற தலைப்பை தேர்வு செய்து அதன் பின்னர் பட்டியலிடப்பட்டுள்ள கோயிலை தேர்வு செய்தவுடன் கோயிலுக்குச் சொந்தமான முழுவதும் ஒத்துப் போகும் இனங்கள் திரையில் தோன்றும். அந்த விவரங்களை பொதுமக்கள் பார்வையிடுவதுடன் பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.

மேலும், பகுதியாக ஒருமித்தநிலங்களின் உரிமை ஆவணங்கள் வருவாய்த் துறை மற்றும்நிலஅளவைத் துறை ஆவணங்களோடு ஒருமித்த ஆய்வு செய்யப்பட்டு சட்ட ரீதியாக நடவடிக்கைஎடுக்கப்படும். அவையும் முழுவதும் ஒருமித்த இனங்களாக மாற்றம் செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்படும்.

கோரிக்கையை தெரிவிக்கலாம்

கோயில்களுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களின் உரிமை ஆவணங்கள் சம்பந்தப்பட்ட கோயில்களின் பெயரிலேயே இருக்கும் வகையில் அனைத்து தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இதுதொடர்பாக ஏதேனும் கருத்து அல்லது கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவிக்க விரும்பினால் ‘கோரிக்கைகளை பதிவிடுக’ என்ற பகுதியில் பதிவிடலாம்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x