Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

கரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள வேண்டும் - குழந்தைகளின் நலனுக்காக தயக்கமின்றி தடுப்பூசி போடுங்கள் : புதுச்சேரி சுகாதாரத் துறை செயலர் வேண்டுகோள்

கரோனா மூன்றாம் அலையை நாம் எதிர்கொள்ள வேண்டும்; எனவே குழந்தைகளின் நலனுக் காக பெற்றோர், பாதுகாவலர்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப் பதாவது:

புதுச்சேரியில் கரோனா இரண் டாம் அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தி. தற்போது குறைந்து வரும் நிலையில் மருத்துவ வல்லு நர்கள் மூன்றாம் அலையில் குழந் தைகளே மிக அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளனர்.

இதனை எதிர்கொள்ளும் வகையில் புதுச்சேரி ராஜீவ்காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடு களும் தயார் ஆகி வருகிறது. மூன்றாம் அலை வந்தபின் சமாளிப்பதைவிட வரும் முன் காப்பதே சிறந்ததாகும். தற்போது ஊரடங்கை தளர்த் திய நிலையில் பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் பொதுஇடங்களில் தனிநபர் இடை வெளியை கடைபிடித்தல், கைக ளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் படுத்துதல், உயிர்க் கவசமான முகக்கவசத்தை சரியாக அணிதல், கரோனா அறிகுறிகள் தென்பட்டால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளுதல், ஆரம்ப நிலையிலேயே கரோனா பரிசோதனை செய்து கொள்ளுதல் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

குழந்தைகளின் பெற்றோர் தடுப் பூசி போடும் பொருட்டு வெளியே சென்று வரும் பெற்றோரிடமிருந்து குழந் தைகளுக்கு தொற்று பரவும் சதவீதம் மிகக் குறைவாகும். ஆதலால் அனைத்து பெற்றோரும், குழந்தைகளின் பாதுகாவலர்களும் குழந்தைகளின் நலனுக்காக தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

கரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வருவதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பே காரணமாகும். அதேபோல் கரோனா மூன்றாம் அலையை தடுக்க பொதுமக்களின் ஒத்து ழைப்பு மிக முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x