Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM

தென்மண்டல ஐ.ஜி டி.எஸ்.அன்பு உத்தரவு - 100 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் :

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர்களை மீண்டும் அவர்கள் விரும்பிய மாவட்டங் களுக்கு இடமாற்றம் செய்து தென்மண்டல ஐ.ஜி டி.எஸ். அன்பு உத்தரவிட்டுள்ளார்.

அதன் விவரம் (அடைப்புக்குறிக் குள் பணிபுரிந்த பழைய இடம்):

நெல்லை நகரில் பணிபுரிந்த ஆய்வாளர்கள் மனோகரன், ஜானகி, கலா, சரஸ்வதி, முத்துராஜ், ஜெயச்சந்திரன், மாரீஸ்வரி, ஆதம்அலி ஆகியோர் நெல்லை சரகத்துக்கும், ஆடிவேல் ராமநாதபுரம் சரகத்துக்கும், பத்மநாபன் மதுரை சரகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். காந்திமதி (மதுரை திருநகர்), வனசுந்தரி (தல்லாகுளம்), ஆர்.கோமதி (கோவில்பட்டி மேற்கு குற்றப்பிரிவு), முத்துலட்சுமி (தூத்துக்குடி குற்றப்பிரிவு), ஹரிகரன் (செங்கோட்டை), முருகன் (நெல்லை சிறப்பு புலனாய்வுப் பிரிவு), ஷோபா சென்சி (தூத்துக்குடி கல்லுக் குளம்), ஆக்னெஜ் பொன்மணி (தென்காசி பொருளாதாரக் குற்றப்பிரிவு), பிரவீனா (சங்கரன்கோயில் நகர்), சாம்சன் (நாகர்கோவில்) ஆகியோர் நெல்லை நகருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பத்மநாபன் (நெல்லை பெருமாள்புரம்), மூக்கன் (திண்டுக்கல் அம்பாத்துறை), தென்றல் (வடமதுரை மகளிர்), பார்த்திபன் (திண்டுக்கல் தாலுகா), கிரேஸ் சோபியா பாய் (கன்னிவாடி), மலர்விழி (பட்டிவீரன்பட்டி), பரமேசுவரி (செம்பட்டி), சம்பத் (பழநி தாலுகா), முத்துக்குமரன் (போடி நகர்), கீதா பெரியநாச்சியார் (திண்டுக்கல் சிறப்புப் பிரிவு), முத்து (ஆண்டிபட்டி), குருவதை (தேனி அல்லிநகரம்), மரிய பாக்கியம் (உத்தமபாளையம் மகளிர்), வீரசோலை (திண்டுக்கல் சிறப்புப் பிரிவு), னிவாசகன் (ஒட்டன்சத்திரம்) ஆகியோர் திண்டுக்கல் சரகத்துக்கும், சுரேஷ் (வடமதுரை) நெல்லை சரகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதே போன்று மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றிய 23 ஆய்வாளர்கள் திண்டுக்கல் காவல் சரகத்துக்கும், சிவ கங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங் களில் பணிபுரிந்த 7 ஆய்வாளர்கள் மதுரை நகர் காவல்துறைக்கும் மாற்றப்பட்டுள் ளனர்.

மதுரை நகர், நெல்லை, திண்டுக்கலில் பணிபுரிந்த 10 ஆய்வாளர்கள் ராமநாதபுரம் சரகத்துக்கும், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் பணியாற்றிய 8 பேர் நெல்லை நகருக்கும், திண்டுக்கல், நெல்லை நகரில் பணியில் இருந்த 9 ஆய்வாளர்கள் நெல்லை சரகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு 100 பேரை இடமாற்றம் செய்து தென்மண்டல ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x